பெய்ரூட்டில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலி – நால்வர் பலி, மேலும் 39 பேர் காயம்
தெற்கு பெய்ரூட்டின் ஜ்னா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, இந்தத் தாக்குதலில் மேலும் 39 பேர் காயமடைந்ததாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் தலைநகரில் உள்ள ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புகளைத் தாக்கி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்தது.
இன்று நடந்த பல தாக்குதல்களைத் தொடர்ந்து, தெற்கு பெய்ரூட்டின் பகுதிகளில் இருந்து புகை எழுவதை படங்கள் பதிவு செய்துள்ளன.
முன்னதாக, தெற்கு லெபனானின் கஃபர் ஹட்டா பகுதியில் நடந்த தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





