உலகம் செய்தி

ஒரு மணி நேரம் உரையாடல் : ஈரான்–பாகிஸ்தான் இடையேயான இராஜதந்திரம்

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif), ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) உடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசியில் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற இந்த விரிவானஉரையாடலில், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை குறைப்பது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளமான X இல் வெளியிட்ட பதிவில், உரையாடலை எளிதாக்கவும் பதற்றத்தை தணிக்கவும் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் உடன் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் இராஜதந்திர முயற்சிகள் குறித்து அவர் விளக்கியதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை (talks) நடாத்துவதற்காக பாகிஸ்தான் முன்வந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை ஷெரீஃப் கண்டித்ததோடு, ஈரானின் மக்களுக்கு பாகிஸ்தான் தனது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!