உலகம் செய்தி

போர் சில வாரங்களில் முடிவுக்கு வரும்: அமெரிக்கா நம்பிக்கை!

ஈரான்மீது முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் U.S. Secretary of State Marco Rubio நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள், ஆயுத உற்பத்திசாலைகள், இராணுவத் தளங்கள் என்பவற்றின்மீது வான்வழித் தாக்குதலை நடத்திவரும் அமெரிக்கா, தரைப்படையையும் களமிறங்க திட்டமிட்டுவருகின்றது.

தரைப்படையினரின் நேரடித் தாக்குதல் இன்றி இலக்குகளை எட்ட முடியும் என அமெரிக்கா கருதினாலும், அவசரத் தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினர் மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையிலேயே அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த போரானது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் மனிதாபிமான நெருக்கடியையும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் ஏவுகணை ஆற்றலே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தற்போது பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!