இலங்கை செய்தி

75 மில்லியன் நட்டஈட்டை செலுத்துமாறு கெஹெலியவுக்கு அதிரடி உத்தரவு

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது.

இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நட்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க சந்திரகுப்த, மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாவைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன ஆகியோர் 50 மில்லியன் ரூபாவை நட்டஈடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட இரு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த பின்னரே இந்தத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அறிவித்தது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!