வளைகுடாவுக்கு கண்காணிப்பு விமானத்தை அனுப்பியது ஆஸ்திரேலியா!
ஈரான்மீதான போருக்கு ராணுவ உதவி வழங்கவில்லை என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் Donald Trump குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய Australia அரசாங்கம் மறுத்துள்ளது.
அமெரிக்காவிடமிருந்து தங்களுக்கு முறையான கோரிக்கைகள் எதுவும் இதுவரை வரவில்லை என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் Richard Marles தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆஸ்திரேலியா தனது E-7A வெட்ஜெடைல் கண்காணிப்பு விமானத்தை வளைகுடா பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படுவது குறித்து ஆஸ்திரேலிய அமைச்சர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பதற்றமான சூழலைத் தணிக்கவும், தடையற்ற வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா தயாராகவே உள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய நலன் மற்றும் கூட்டணி நாடுகளின் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே ஆஸ்திரேலியா தனது ராணுவ முடிவுகளை எடுக்கும் என அவர் மேலும் கூறினார்.





