‘எரிபொருள் நெருக்கடி’- விமான சேவையை நிறுத்தியது Jetstar
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், Jetstar நிறுவனம் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான பல விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
மே மாதத்தில் சுமார் 12 சதவீத விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறி மன்னிப்புக் கோரியுள்ளது.
பொருளாதாரச் சுமை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வியட்நாம் மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்களது உள்நாட்டுச் சேவைகளைக் குறைத்துள்ளன.
உலகளாவிய பதற்றங்கள் சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் செலவு அதிகரிப்பு பயணத் திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, பயணிகளுக்கு அசௌகரியங்களை உருவாக்கியுள்ளது.





