ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 2026 யால பருவத்திற்கான உரக் கையிருப்பினை தடையின்றி பேணுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி வழங்கவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தற்காலிக தீர்வுகளுக்கு அப்பால், எதிர்கால நெருக்கடிகளைச் சமாளிக்க அரசாங்கம், தனியார் துறை மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து நீண்டகாலத் திட்டமொன்றை வகுக்க வேண்டும் என இதன் போது அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உணவுப் பாதுகாப்பிற்கு உர விநியோகம் மிக முக்கியமானது என்பதால், குறுகிய காலப் பயிர்களான நெல் மற்றும் மரக்கறி செய்கைக்கு முன்னுரிமை அளிக்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கேட்டுக்கொண்டார்.





