தேசிய பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய மக்கள் அச்சம்!
ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் அந்நாட்டு மக்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவருகின்றது.
இதற்கமைய அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு வெளிநாட்டு இராணுவத் தாக்குதல் நிகழக்கூடும் என்று ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் அஞ்சுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவுத் தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தங்களது நாடு போதியத் தயார் நிலையில் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஆஸ்திரேலியாவிற்கு வர வேண்டிய எரிபொருள் கப்பல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி குறித்து மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை ஆய்வு தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலிய அரசு இந்த சவால்களைச் சமாளிக்க கூடுதல் தகவல்களையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே வலுவாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





