இலங்கை செய்தி

அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகள் சிதைந்துவிட்டன

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும்
அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இடைத்தரகர்களின் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக, சந்தையில் அரிசியின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

மீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதால், நுகர்வோர் அதிக விலைக்கு மீன்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் சிதைந்துவிட்டன” என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முறையான பொறிமுறையொன்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!