தொடரை வெல்லுமா நியூசிலாந்து? நாளை பலப்பரீட்சை!
நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 4ஆவது T20 போட்டி நாளை (21) நடைபெறுகின்றது.
இப்போட்டியில் வெற்றிபெற்றால் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றும். எனவே, அவ்வணி முழு பலத்துடன் களமிறங்கவுள்ளது.
மறுபுறத்தில் இப்போட்டியில் வென்று தொடரில் தமக்கான வெற்றிவாய்ப்பையும் தக்கவைப்பதற்கு தென்னாபிரிக்கா அணி போராடும். எனவே, போட்டியில் கடைசிவரை விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
நேற்று நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது. இதன் அடிப்படையில் 2 – 1 என்ற அடிப்படையில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கின்றது.





