யாழில் புதிய அமைப்பாளரை களமிறங்கியது SJP!
ஐக்கிய மக்கள் சக்தியின் SJP யாழ்ப்பாணம் -கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளராக அருந்தவநாதன் அனோஜன் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவினால் நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
அதேவேளை கோப்பாய் தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக சதாசிவம் திலீப்குமாரும், ஒருங்கிணைப்பாளராக கமலசிங்கம் மதனகாந்தும் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமன கடிதத்தையும் சஜித் பிரேமதாசா வழங்கி வைத்தார்





