வரலாறு காணாதளவு வீழ்ச்சி கண்ட இந்திய ரூபாவின் பெறுமதி
இந்தியாவில் வரலாறு காணாதளவில் டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி ரூ. 93.40 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
முந்தைய வரத்தக முடிவில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி ரூ.92.87 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.93.40 ஆக உயர்ந்து
வரத்தகம் செய்யப்படுகிறது.
இது முன் எப்போதும் இல்லாத சரிவு என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வே இதற்கு காரணம் என
கூறப்படுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி தேதி தாக்குதலை தொடங்கியதை அடுத்து,
இவ்விரு நாடுகளுக்கும் எதிராக ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேலின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதல் உட்பட அந்நாட்டுக்கு எதிராக தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் ஈரான்,
அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அத்துடன், வளைகுடா நாடுகளின் முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.
இதனால், உள்ளே உள்ள கப்பல்கள் வெளியே செல்ல முடியாமலும், வெளியே உள்ள கப்பல்கள் உள்ளே செல்ல முடியாமலும் உள்ளன.
இது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பரவாலாக்கத்துக்கு வழி வகுத்துள்ளது.
இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 94.5 டாலராக உள்ளது. உயர்ந்த தரம் கொண்ட பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 107.65 டொலராக உள்ளது.
டொலர் மூலமாகவே எண்ணெய் வர்த்தகம் நடைபெறுவதால் டொலருக்கான பெறுமதியும் உயர்ந்து வருகிறது.
டொலர் பெறுமதி உயர்வதால், இந்திய பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை விற்றுவிட்டுலரை நோக்கி நகருகிறார்கள். இதனால், இந்திய பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. டொலரின் மதிப்பு உயர்வதால் ரூபாவின் மதிப்பும் சரிந்து வருகிறது.
வட்டி வகிதங்களைக் குறைப்பதற்கான வாய்ப்பு ஏறக்குறைய இல்லை என்பதாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் எடுத்துள்ள நிலைப்பாடு காரணமாக,
டொலர் வலுவாகவே இருந்து வருகிறது. இது முதலீடுகளை ஈர்த்து வருகிறது.
இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காகவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்வதைத் தடுக்கும் நோக்கிலும் ரஷ்யா உட்பட வேறு பல நாடுகளிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இதனால், இந்தியா அதிக அளவில் டாலரை வாங்குகிறது. புவிசார் அரசியலில் ஏற்பட்டிருக்கும் நிலையற்றத் தன்மை காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.





