இலங்கை செய்தி

“பைபிள் விவகாரம்” – பொலிஸ் அதிகாரிக்கு திருநீறு பட்டை போட்டது சிவசேனை!

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபையொன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாடு தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்தார் எனக்கூறி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி திருநீறு அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் சிவசேனை அமைப்பை சேர்ந்தவர்.

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனமொன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில், பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை அன்பளிப்பு செய்வதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.

குறித்த விடயம் சர்ச்சையான நிலையில் சிவசேனை அமைப்பை சேர்ந்த ஜெயமாறன் என்பவர் தலைமை பொலிஸ் நிலையத்தில் இலவசமாக பைபிள் வழங்கும் நடவடிக்கை ” மத கலவரத்தை தூண்டும் ” எனவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார், வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சு என்பவற்றுக்கு அது தொடர்பில் அறிவித்த நிலையில், குறித்த கிறிஸ்தவ சபையை சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குமாறு கடிதம் மூலம் பைபிளை வழங்க முற்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது முறைப்பாட்டை ஏற்று, உடனடியாக நடவடிக்கை எடுத்த யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ணவிற்கு சிவசேனையை சேர்ந்த ஜெயமாறன் நன்றி தெரிவித்து, பொன்னாடை போர்த்தி திருநீறு பட்டை அணிவித்து கௌரவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!