அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நன்கொடை!
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த 10 ஹெலிகொப்டர்களும் கடந்த மார்ச் 15ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள போர்ட் மொபைல் துறைமுகத்திலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்பட்டு எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த ஹெலிகொப்டர்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தூதுவர் மஹிந்த சமரசிங்க, இந்த அன்பளிப்பானது அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான நீண்டகாலக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.





