நிச்சயம் பழி தீர்ப்போம்: ஈரான் ராணுவத் தளபதி சபதம்!
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாதுகாப்பு பிரதானி அலி லாரிஜானி Ali Larijani கொல்லப்பட்டதற்கு ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி Amir Hatami கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலுக்குப் பழிவாங்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது நிச்சயமான மற்றும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் புரட்சிகர காவல்படை ஏற்கனவே இஸ்ரேலின் மையப்பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை ஏவித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த வீரர்களின் மரணத்திற்கு நீதி வழங்கப்படும் என்று ராணுவம் உறுதியளித்துள்ளதால், இப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.





