இலங்கை செய்தி

QR சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளன- மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்

 

எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 10,000 பேரைத் தவிர ஏனைய அனைவரும் தமக்குரிய QR குறியீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன்படி, இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் QR குறியீட்டைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பதிவு செய்யும் போது சிலருக்கு மாத்திரம் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பெரும்பாலான தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் மீண்டும் முயற்சிப்பதன் மூலம் இந்த QR குறியீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பொதுவாக ஒரு மணித்தியாலத்திற்கு 30,000 பேர் புதிதாகப் பதிவு செய்து வருகின்றனர். அந்த நேரத்தில் ஏனையோருக்கு ‘Error’ செய்தி வரலாம். ஆனால் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் 30,000 பேர் பதிவாகின்றனர். ஏனெனில் நாம் இப்போது பெரும்பாலான சிக்கல்களைத் தீர்த்துள்ளோம்.

புதிய QR ஒன்று வராது. நாம் சுமார் 2 மில்லியன் தரவுகளை முறைமையிலிருந்து அழித்துள்ளோம். இப்போது மிகச் சிறியளவிலானோரே ‘Inactive’ எனக் காட்டப்படுகின்றனர். எனவே அந்தப் பிரிவினர் மீண்டும் பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள். QR ஒதுக்கீடு (Quota) இந்த வார இறுதியில் முடிவடைவதால், QR குறியீட்டைச் சீர்செய்து உங்களுக்குரிய எரிபொருள் அளவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.”

அத்துடன், சில தரப்பினரிடம் உள்ள வாகன பதிவுச் சான்றிதழ் முறையாக மாற்றப்படாமல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதற்காகப் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 9 மாகாணங்களுக்கும் 9 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதன் ஊடாக அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் செய்து கொடுக்கப்படும்.

“சிலரது வாகன பதிவுச் சான்றிதழ் சட்டபூர்வமாக மாற்றப்படவில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவை எந்தத் தரவுகளிலும் பதிவாகாது. அத்தகையவர்களுக்காக 9 மாகாணங்களுக்கும் 9 இலக்கங்களை இன்று மாலை அறிவிப்போம். அந்த இலக்கங்களுக்கு எத்தகைய விபரங்களை அனுப்ப வேண்டும் என்பதையும் இன்று அறிவிப்போம். உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு வட்ஸ்எப் ஊடாகத் தகவல்களை அனுப்பினால், அந்தத் தரவுகளைப் பரிசீலித்து மீண்டும் அதனைச் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!