உலகம் செய்தி

ஐரிஸ் தேனா துயரம் – 84 பேரினதும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி அழைப்பு

ஈரான் கடற்படையினரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளுமாறு தெஹ்ரான் மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக் கடற்கரைக்கு அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில்
மூழ்கியதாக கூறப்படும் ஐரிஸ் தேனா (IRIS Dena)கப்பலில் உயிரிழந்த 84 மாலுமிகளுக்கான இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் “இந்த தியாகிகளின் நினைவில் மேலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உருவாகுவார்கள் என்பதை எதிரிகள் உணர வேண்டும்” என ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனை மேற்கோள்காட்டி டஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாலுமிகளின் சவப்பெட்டிகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தெஹ்ரான் நகரம் முழுவதும் உள்ள 34 முக்கிய சதுக்கங்களில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!