ஈரானில் தாக்குதல்களை தீவரப்படுத்தும் இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரான் (Iran) மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் மத்திய ஈரானில் உள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில், ஈரானிய ஆட்சியின் முக்கிய உட்கட்டமைப்புகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கைகள், ஈரானிய ஆட்சியின் “கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு திறன்களை” பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய ஆட்சியின் முக்கிய செயல்பாட்டு அமைப்புகள் மற்றும் அடித்தளங்களுக்கு ஏற்படும் சேதத்தை மேலும் அதிகரிக்கும் தொடர்ச்சியான இராணுவ முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.





