இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார்.

எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்து எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இவ்வாரம் கூடவுள்ளது.

மேற்படி குழுவின் தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார இலக்குகளை நோக்கி செல்லும் போது அநாவசியமான அழுத்தங்களை தவிர்க்கும் வகையிலேயே மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, பழைய முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு சிறியதொரு சட்டத்திருத்தமே தேவைப்படுகின்றது என எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கிலேயே எல்லை நிர்ணயம் பற்றி ஆளுந்தரப்பு கதைத்துவருகின்றது எனவும் மேற்படி கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!