ஐரோப்பா செய்தி

ஈரான் மீதான போர் – உலகளாவிய உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை

ஈரான் மீதான போர் நீடித்தால், உலகளாவிய உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்படலாம், என நோர்வேயின் யாரா இன்டர்நேஷனல் (Yara International) தலைவர் ஸ்வீன் டோர் ஹோல்செதர் (Svein Tore Holsether) எச்சரித்துள்ளார்.

நோர்வேயின் யாரா இன்டர்நேஷனல் நிறுவனம் விவசாயத்திற்கு தேவையான உர உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிறுவனத்துக்கு நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா மற்றும் தென் அமெரிக்காவிலும் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்நிலையில் உலகின் ஏழ்மையான சில நாடுகளில் உணவு விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால்
பிராந்திய மோதலால் நேரடியாக உணவு விநியோகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

போர் தொடங்கிய இரண்டுவாரத்தில், உர (fertilizer) மூலப்பொருட்களின் விலை உயர்வடைந்தது.

யூரியா விலை ஒரு தொன்னுக்கு $487 இருந்து $700 ஆக உயர்ந்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!