பொழுதுபோக்கு

‘விஜய்’ பெயரை கேட்டதுமே மின்னல் வேகத்தில் மறைந்த திரிஷா!

தமிழக அரசியல் களம் மற்றும் திரையுலகில் விஜய், திரிஷா பற்றிய கதைகள் இன்னும் ஓயவில்லை. அது ஏதோவொரு வடிவில் ஒலித்துகொண்டுதான் இருக்கின்றது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவியுள்ளார் நடிகை திரிஷா.

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனது கணவர் விஜயுடன் தான் சேர்ந்துவாழ விரும்பவில்லை. எனவே தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என அவர் கோரி இருந்தார்.

இதனையடுத்து இவ்விவகாரம் பேசுபொருளாக மாறியது. விஜய், நடிகையொருவருடன் தொடர்பில் உள்ளார் என்ற தகவலையும் அவர் வெளியிட்டதால், அது திரிஷாதான் என்ற தகவலும் காட்டுத் தீயாக பரவியது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் திருவான்மியூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜயும், நடிகை திரிஷாவும் ஒரே மாதிரி உடைகளை அணிந்துகொண்டு பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் சென்னையில் இருந்து மும்பை செல்வதற்காக நடிகை திரிஷா சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்திருந்தார்.

அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரிடம், நடிகர் விஜய் தொடர்பான சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர்.அப்போது, நடிகை திரிஷா எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக விறுவிறு என்று நடந்து விமான நிலையத்தின் உள்ளே சென்று விட்டார்.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!