ஆஸ்திரேலியா உலகம்

ஈரானை எதிர்க்கிறது ஆஸ்திரேலியா: மத்திய கிழக்கில் 6 குழுக்கள் களமிறக்கம்!

மத்திய கிழக்கு போரில் ஆஸ்திரேலியா நேரில் பங்கேற்காவிட்டாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சார்பான நிலைப்பாட்டிலேயே அந்நாட்டு அரசாங்கம் உள்ளது.

ஈரான் உச்ச தலைவரின் மரணத்துக்குகூட ஆஸ்திரேலியா அனுதாபம் தெரிவிக்கவில்லை.

அதேபோல உச்ச தலைவருக்கு சில மசூதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஆஸ்திரேலியர்களுக்கு உதவும் வகையில் ஆறு அவசரகால உதவிக் குழுக்களை அந்நாட்டு அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

வான்வழிப் போக்குவரத்து முடக்கத்தால் வெளியேற முடியாமல் தவிப்பவர்களுக்குத் தேவையான தூதரக ஆதரவை இந்த குழுக்கள் வழங்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக, துபாயிலிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வணிக ரீதியிலான விமானம் தற்போது சிட்னி நோக்கிப் பயணித்து வருகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக மீட்புக் குழுவினரின் பயண விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த மீட்பு நடவடிக்கை, அந்த பிராந்தியத்தில் உள்ள ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல சவால்களுக்கு மத்தியிலும், மீதமுள்ள குடிமக்களைத் தாய்நாட்டிற்கு அழைத்து வர ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

அதேவேளை, ஐக்கிய அரபு அமீரக தலைவரும், ஆஸ்திரேலிய பிரதமர் தொலைபேசிமூலம் உரையாடியுள்ளார்.

ஈரானின் தாக்குதலையும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!