இந்தியா செய்தி

அலி கமெனி கொலை செய்யப்பட்டமைக்கு இந்தியாவின் பல பகுதிகளில் எதிர்ப்பு

ஈரான் நாட்டின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமெனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டதைத்
தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டதைத் கண்டித்து சென்னை, காஷ்மீர் மற்றும் லக்னோவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ராயப்பேட்டையில் உள்ள பீட்டர்ஸ் வீதியில் புது கல்லூரி அருகே இடம்பெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்களுடன் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை இந்தியாவில் உள்ள பல முஸ்லிம் மத தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!