ஈரான் மீதான தாக்குதல் : இலங்கைக்கு மற்றுமொரு பேரிடி!
மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்ற நிலை இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர் வீரசிங்க, உலகளாவிய தினசரி எண்ணெய் உற்பத்தி சுமார் 100 மில்லியன் பீப்பாய்களாக உள்ளது என்றும், சுமார் 20% மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிப்பதன் மூலம் உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.
மேலும் தெரிவித்த அவர், “நாங்கள் ஈரானுக்கு கணிசமான அளவு தேயிலை ஏற்றுமதி செய்கிறோம். அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். இந்த சூழ்நிலையில், மோதல் சூழ்நிலை அந்த நடவடிக்கைகளை சீர்குலைக்கக்கூடும்.
ஏற்கனவே, நாடுகளுக்கு இடையிலான பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலைமை உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் மட்டுமல்ல, சர்வதேச உறவுகளிலும் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.





