ஐரோப்பா செய்தி

விமானங்கள் ரத்து – பிரித்தானியர்களுக்கான விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) மற்றும் வர்ஜின் அட்லாண்டிக் (Virgin Atlantic) உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கு பகுதிகளுக்கான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் (Al Maktoum International Airport) ஊடாக இடம்பெறும் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வான்வெளி மூடப்பட்டிருப்பதாலும், சில நாடுகளில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், நீண்ட தூரப் பயணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பயணிகள் புறப்படும் முன் தங்களது விமான நிறுவனங்களுடன், நிலைமையை சரிபார்க்குமாறு ஹீத்ரோ விமானநிலைய (Heathrow) நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) டெல் அவிவ் மற்றும் பஹ்ரைன் நோக்கி இயக்கப்படும் சேவைகளை புதன்கிழமை வரை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஹீத்ரோவிலிருந்து அபுதாபி, அம்மான், தோஹா, டுபாய் மற்றும் டெல் அவிவ் இடையேயான சேவைகளும் பல நாட்களுக்கு பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வர்ஜின் அட்லாண்டிக் (Virgin Atlantic) ஹீத்ரோ மற்றும் ரியாத் இடையேயான சேவையையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!