ஐரோப்பா

ராணி இரண்டாம் எலிசபெத் சிறுவயதில் எழுதிய கடிதம் ஏலத்தில் விற்பனை!

பிரித்தானியாவின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், சுமார் 10 வயதாக இருந்தபோது எழுதிய குழந்தைப் பருவக் கடிதம், ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கென்ட்டில் நடந்த ஏலத்தில் அக்கடிதம் £25,000க்கு விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1936 மற்றும் 1940 க்கு இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் குறித்த கடிதம் விண்ட்சரில் (Windsor) உள்ள ராயல் லாட்ஜில் (Royal Lodge) தலைமை வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்த பீட்ரைஸ் ஸ்டில்மேனுக்கு  ( Beatrice Stillman) அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் அவர் பறவைகள் மற்றும் தங்கமீன்களின் நலனைப் பற்றி விசாரித்துள்ளார். அத்துடன் தேர்ந்தெடுத்த ப்ரிம்ரோஸ்களை (primroses) ஊழியர்களிடையே பகிர்ந்து கொள்ளுமாறு கோரியுள்ளார்.

கடிதத்தின் வரலாற்று வசீகரத்தையும், எதிர்கால ராணியின் ஆரம்பகால குணாதிசயத்தை குறிப்பதாகவும் ஏலதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!