ரஷ்ய போர் களத்தில் இரு தென்னாப்பிரிக்க வீரர்கள் உயிரிழப்பு!
உக்ரைனில் ரஷ்யாவுக்காகப் போராடிய இரு தென்னாப்பிரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரொனால்ட் லமோலா (Ronald Lamola) உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நபர்கள் போலி வேலைவாய்ப்பு மோசடி மூலம் ரஷ்யாவின் ஆட்சேர்ப்பு திட்டத்தில் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலில் ஈடுபடுவதற்கு முன்பு பாதுகாப்புப் பயிற்சி அளிப்பதாக பொய்யான வாக்குறுதிகள் அளித்து போர்களத்தில் எவ்வித பயிற்சியும் இன்றி விடப்பட்டதாக ரஷ்யாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய தென்னாப்பிரிக்க வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சட்டவிரோத நடைவடைக்காக முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமாவின் (Jacob Zuma) மகள் டுடுசில் ஜுமா-சம்புட்லா (Duduzile Zuma-Sambudla) பொலிஸ் விசாரணையில் உள்ளார். இருப்பினும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் மோதலில் ரஷ்யாவுக்காகப் போராட 1,700க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக உக்ரைன் மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





