இலங்கை செய்தி

4 மாதங்களுக்குள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் கைது! பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு!!

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அகன்று செல் விசேட நடவடிக்கையின்கீழ் நாட்டில் கடந்த நான்கு மாதங்களுக்குள் ஒரு லட்சத்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 900 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 மாத காலப்பகுதிக்குள் 15 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று 24 நடைபெற்றது.

இதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எவ்.யு. வூட்லரும் பங்கேற்றிருந்தார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான அகன்று செல் எனும் தேசிய திட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அன்று முதல் இதுவரையில் 526 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் 34 ஆயிரத்து 360 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி 4 மாத காலப்பகுதிக்குள் ஆயிரத்து 419 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பில் 38 ஆயிரத்து 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 ஆயிரத்து 548 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. அது தொடர்பில் 24 ஆயிரத்து 244 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி காலப்பகுதிக்குள் ஒரு லட்சத்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் 146 விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
2 ஆயிரத்து 400 பேருக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.” – எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!