அரசியல் இலங்கை

கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

திருவிழா தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (24) நடைபெற்றுள்ளது.

இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும்  பக்தர்களின் எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், கழிவறை வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து  இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை,  2026 ஆம் ஆண்டுக்கான கச்சதீவு வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!