இந்தியாவில் இந்த மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் கைடக்கத்தொலைபேசி பயன்படுத்த தடை
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோர் கையடக்கத்தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால், சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக உலக நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.
மேலும் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்தது.
இந்த நிலையில், இந்தியாவிலும் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 16 வயதுக்கு உட்பட்டோர் கையடக்கத்தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உடனான ஆலோசனையின் போது பேசிய சித்தராமையா, சிறுவர்கள் தொலைபேசிக்கும் அடிமையாகியுள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.





