இலங்கை செய்தி

மரை இறைச்சி விற்றவர் திருமலையில் கைது!

மரை இறைச்சி விற்றவர் திருமலையில் கைது!

மரை இறைச்சியை குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்தார் எனக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மொரவெவ இரண்டாம் வாய்க்கால் பகுதியில் வீடொன்றில் மரை இறைச்சி விற்பனை செய்யப்பட்டுவருவதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி தகவலுக்கமைய வீட்டை சோதனையிட்ட போது 04 கிலோ 500 கிரேம் மறை இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை மொரவெவ சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மொரவெவ பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!