எப்ஸ்டீனைச் சந்திக்க வரிப்பணத்தில் இயங்கும் ஜெட் விமானங்களை ஆண்ட்ரூ பயன்படுத்தினாரா?
முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ வர்த்தக தூதுவராக பணியாற்றிய காலத்தில், ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்திக்க வரிப்பணத்தில் இயங்கும் ஜெட் விமானங்கள் அல்லது RAF தளங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை பொலிஸ் விசாரிக்க வேண்டும் எனமுன்னாள் பிரதமர் Gordon Brown கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆண்ட்ரூ தொடர்பில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் வெளியாகின்ற போதிலும் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றார்.
ஆனாலும் ஆண்ட்ரூ குறித்த அரசியல் அழுத்தம் பிரித்தானியாவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





