ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மாணவர் கடன் வட்டி விகிதம் குறைப்பு – அரசியல் மோதல் தீவிரம்

பிரித்தானியாவில் மாணவர் கடன் வட்டி விகிதத்தை குறைப்பது தொடர்பாக அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.

கன்சர்வேடிவ் கட்சி தலைவர் கெமி படேனோக் (Kemi Badenoch), 2012 முதல் 2023 வரை வழங்கப்பட்ட திட்ட்ம் 2 (Plan 2) மாணவர் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டியை குறைப்பதாக அறிவித்துள்ளார்.

தற்போது இந்தக் கடன்களுக்கு சில்லறை விலைக் குறியீடு ஆர்.பி.ஐ (RPI – Retail Price Index) மற்றும் கூடுதலாக 3 சதவீதம் வரை வட்டி அறவிடப்படுகிறது.

இந்நிலையில் வட்டியை ஆர்.பி.ஐ மட்டுமே என்ற அளவில் நிர்ணயிப்போம் என அவர் கூறியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை சுமார் 5.8 மில்லியன் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்றுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves), மாணவர் கடன் முறை நியாயமானது எனக் கூறியுள்ளார். பணவீக்கம் குறைந்தால், வட்டி கட்டணமும் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தொழிலாளர் கட்சியின் சில உறுப்பினர்கள் இந்த முறையை நியாயமற்றது என விமர்சித்துள்ளனர்.

மாணவர் கடன் பிரச்சினை, இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளை பாதிக்கும் முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!