யூடியூப்பில் 01 பில்லியன் சந்தாகாரர்கள் : சாதனை படைத்த தென்கொரியா!
தென்கொரியாவின் பிளாக்பிங்க் (Blackpink) என்ற யூடியூப் சேனல் (YouTube) உலக வரலாற்றில் முதல் முறையாக 100 மில்லியன் சந்தாதாரர்களை எட்டி சாதனை படைத்துள்ளது.
இதற்கமைய குறித்த குழுவில் உள்ள ஜிசூ (Jisoo), ஜென்னி (Jennie), ரோஸ் (Rose) மற்றும் லிசா (Lisa) ஆகிய நான்கு பெண்களுக்கும் ரெட் டயமண்ட் கிரியேட்டர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
இது அந்த மைல்கல்லை எட்டிய முதல் அதிகாரப்பூர்வ கலைஞர் சேனல் என்ற சாதனையைக் குறிக்கிறது. அத்துடன் யூடியூப்பின் 1 பில்லியன் பார்வைகள் கிளப்பில் கே-பாப் குழு ஒன்பது பதிவுகளைக் கொண்டுள்ளது.
அவர்களின் பாடல் பட்டியலில் Ddu-Du Ddu-Du (2018), இது 2.1 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கில் திஸ் லவ் (2019) 2 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
அவர்களின் How You Like That நடன நிகழ்ச்சி வீடியோ (2020) 1.4 பில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





