இலங்கை

200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு – பல பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு!

நாட்டின் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதவாகியுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில்  ஏராளமான பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நான்கு மாவட்டங்களில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு சிவப்பு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மூத்த புவியியலாளர் டாக்டர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,

கண்டி மாவட்டம்: உடதும்பர, கங்காவட இஹல கோரலே, டோலுவ, யட்டிநுவர
கேகாலை மாவட்டம்: கேகாலை, யட்டியந்தோட்டை, மாவனெல்லா, தெஹியோவிட்ட, அரநாயக்க
மாத்தளை மாவட்டம்: லக்கல-பல்லேகம, அம்பன்கங்க கோரலே, உக்குவெல, வில்கமுவ, ரத்தோட்டை
இரத்னபுர மாவட்டம்: இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நிலை 2 இன் கீழ் ஆறு மாவட்டங்களில் உள்ள 12 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,

பதுளை மாவட்டம்: ஹல்துமுல்ல
காலி மாவட்டம்: நியகம
கண்டி மாவட்டம்: மெடதும்பர, பாததும்பர
மொனராகலை மாவட்டம்: படல்கும்புர
நுவரெலியா மாவட்டம்: நில்தந்தஹின்ன, வலப்பனை, நோர்வூட், அம்பகமுவ
இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவான, அயகம ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எட்டு மாவட்டங்களில் உள்ள 23 DS பிரிவுகளுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இதற்கமைய,

பதுளை மாவட்டம்: மீகஹகிவுல, கண்டகெட்டிய, ஹப்புத்தளை, பசறை, பண்டாரவளை
ஹம்பந்தோட்டை மாவட்டம்: வலஸ்முல்ல
கண்டி மாவட்டம்: உடபலத்த, உடுநுவர, பததும்பர, பஸ்பாகே கோரளே
கேகாலை மாவட்டம்: தெரணியகல, புலத்கோஹுபிட்டிய
குருணேகல மாவட்டம்: மல்லவபிட்டிய, ரிதீகம
மொனராகல மாவட்டம்: வெல்லவாய
நுவரா எலியா மாவட்டம்: மதுரட்ட, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, ஹங்குரான்கெத்த
ரத்னபுர மாவட்டம்: குருவிட்ட, நிவிதிகல, எஹெலியகொட, கொலொன்ன ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பெய்யும் மழையைப் பொறுத்து நிலச்சரிவு எச்சரிக்கைகள் திருத்தப்படலாம் என்று மூத்த புவியியலாளர் டாக்டர் வசந்த சேனதீர மேலும் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!