இலங்கை செய்தி

அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இடையே சந்திப்பு

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அண்மைக்கால பாதுகாப்பு அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

டிட்வா புயல் அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு பிரதி அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

அத்துடன் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நான்கு கடலோர பாதுகாப்பு கப்பல்கள், பீச்கிராப்ட் கிங் எயார் விமானம்,
அதிநவீன ‘பிளீட் பிராட்பேண்ட்’ செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் 10 பெல் வுர்-57 பயிற்சி ஹெலிகள்
ஆகியவற்றின் பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் இன்றைய தினம் அமெரிக்காவிலிருந்து
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!