அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் வெனிசுலாவில் 379 அரசியல் கைதிகள் விடுதலை
வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் ஏகமனதாக பொது மன்னிப்பு சட்டமொன்றை ஏற்றுக்கொண்
நிலையில் இந்தச் சட்டத்துகக்கமைய, 379 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
சட்டமன்ற துணைத் தலைவர் ஜார்ஜ் அரேசா (Jorge Arreaza) இதனை அறிவித்துள்ளார்
இவர்கள் இன்றிரவு முதல் நாளை காலை வரை விடுவிக்கப்படலாம். பொது மன்னிப்பு வழங்குவதற்கான கோரிக்கைகள் தகுதிவாய்ந்த நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுள்ள நிலையில் இடைக்கால அதிகாரிகளால் இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தச் சட்டத்தை விமர்சித்துள்ளனர். அவர்கள், இந்தச் சட்டம் அரசியல் எதிரிகளை குறிவைக்க பயன்படுத்தப்படலாம் எனக் கூறுகின்றனர்.
இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez), எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ (María Corina Machado) மீது முன்னர் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.
மேலும், பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் பாதுகாப்புப் படையினருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினருக்கு எதிரான வழக்குகளை இராணுவ நீதிமன்றம் கையாளும் என்றும், தேவையான இடங்களில் சலுகைகள் வழங்கப்படும் என்றும் அரேசா கூறியுள்ளார்.
முன்னதாகவும், அரசாங்கம் நூற்றுக்கணக்கானவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





