அரசியல் இலங்கை செய்தி

வங்குரோத்து அரசியல்வாதிகளால் இனவாத ஆயுதம் கையிலெடுப்பு!

“வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டுவதற்கு முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.”

இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ இலங்கையில் காலகாலமாக இனவாதப் பிரச்சினைகள் மேலோங்கியே காணப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

எனினும், நாடாளுமன்றத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக இனரீதியான பாகுபாட்டுக்கு தீணி போடுபவர்களாகவே செயல்பட்டனர்.
இப்படியானவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் சலுகைகள் எதற்கு? எனவே, ஓய்வூதியம் தேவை இல்லை.” எனவும் அமைச்சர் கூறினார்.

கடந்த காலங்களில் நாசமாக்கப்பட்டிருந்த நாட்டை தற்போதே கட்டியெழுப்பி புதிய அத்தியாயத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து பயணிக்ககூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.

தமிழ் மக்களுக்கு கடந்தகாலங்களில் பாகுபாடு காட்டப்பட்டது. இந்நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. எவருக்கும் பிரிவினை காட்டப்படுவதில்லை.

கடந்த 200 வருடங்களாக இந்நாட்டுக்கு மலையக மக்கள் உழைத்தனர். அந்த சமூகம் தொடர்பில் கடந்தகாலங்களில் கவனம் செலுத்தப்படவில்லை. அவர்களுக்காக குரல் எழுப்படவில்லை.

இந்நிலைமையும் மாற்றப்பட்டுள்ளது. மலையகத்தில் புதிய அத்தியாயத்துக்கு சிறப்பான ஆரம்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த கால அரசியல்வாதிகள் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டி, நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளுவதற்கு முற்படுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.

எனினும், இனவாதம் மற்றும் மவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம்.” – என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் கூறினார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!