இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: விசாரணை வேட்டை தீவிரம்!
தென்னிலங்கையில் சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை வேட்டை இடம்பெற்றுவருகின்றது.
இதற்காக 10 விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) மாலை 5 மணியளவிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது.
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து, காரில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த குற்றச் செயலை புரிந்துள்ளனர்.
ஜீப் வாகனத்தின் இருந்த சட்டத்தரணியையும் அவரது மனைவிமீதும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
குற்றவாளிகளை கைது செய்வதற்காகவே விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, சட்டத்தரணிகள் சங்கம் கொழும்பில் நாளை விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.





