ICC World Cup: இன்று நடைபெறும் மும்முனைச் சமர்!
ICC World Cup தொடரில் இன்று (17 ) மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
Colombo (SSC) மைதானத்தில் நடைபெறும் 22 ஆவது லீக் ஆட்டத்தில் Ireland மற்றும் Oman அணிகள் மோதுகின்றன.
தங்களின் பிரிவில் முன்னிலைப் பெற இரு அணிகளும் வெற்றியை கட்டாயமாக குறிவைத்து களமிறங்குகின்றன.
கொல்கத்தா Eden Gardens இல் நடைபெறும் அடுத்த 23 ஆவது லீக் ஆட்டத்தில் England மற்றும் Scotland அணிகள் பலத்த சவாலை ஏற்படுத்துகின்றன.
அனுபவம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்த்து ஸ்காட்லாந்து அதிரடி காட்டுமா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
இன்றைய மிகப்பெரிய மோதல் அகமதாபாத் இல் Ahmedabad நடைபெறுகிறது.
New Zealand மற்றும் South Africaஅணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் கோப்பை வெற்றிக்கான பலமான அணிகளாக கருதப்படுவதால், இந்த ஆட்டம் ‘ஹை வோல்டேஜ்’ போட்டியாக அமையும்.





