செய்தி

சமஷ்டி குறித்து சந்திப்பு: அழைப்பை நிராகரித்தது தமிழரசுக் கட்சி!

ஒற்றையாட்சி அரசமைப்பு வரைபை நிராகரித்து, கூட்டாட்சி தீர்வை வலியுறுத்தித் தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி ITAK நிராகரித்துள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவையின் Tamil National Council ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், Gajendrakumar Ponnambalam இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது தொடர்பில் கடிதம் அனுப்பி இருந்தார்.

“ தமிழ் மக்கள் தேர்தல்கள் தோறும் சமஷ்டி தீர்வுக்கே ஆணை வழங்கி வருகின்றனர்.

ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு,2015 – 2019 காலப்பகுதியில் தயாரிக் கப்பட்ட ஒற்றையாட்சி வரைபை நிறைவேற்ற முனைகின்றது.

இந்தச் சதியை முறியடிக்கவும், தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி தீர்வை முன்வைக்கவும்தமிழ்த் தரப்புகள் ஓரணியில் திரள வேண்டும். “ என மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அழைப்புக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி. கே.சிவஞானம் C.V. K. Sivannanam பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

“உங்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒற்றையாட்சிவரைவு தொடர்பான விமர்சனங்களின் அடிப்படையில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பது சாத்தியமற்றது.

எனினும், ஒற்றையாட்சி முறையை முழுமையாக எதிர்ப்பதிலும், சமஷ்டி முறையை வலியுறுத்துவதிலும் எமதுகட்சி என்றும் உறுதியாகவே உள்ளது.” என்று மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், நாளை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ஏனைய தமிழ்த் தேசி யக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்பு களும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்ப டுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!