கனடாவை தோற்கடித்தது UAE அணி!
கனடா Canada மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் United Arab Emirates அணிகளுக்கிடையிலான போட்டியில் கனடா அணி தோல்வி அடைந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
T 20 உலகக்கிண்ண தொடரில் இன்று (13) மாலை நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் UAE- கனடா அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதற்கமைய களமிறங்கிய கனடா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது.
இறுதியில் கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. UAE தரப்பில் ஜுனைத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 151 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி, 19.4 ஓவர்களில5 விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது.





