இலங்கை செய்தி

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுவோருக்கான அவசர அறிவிப்பு

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாதோர் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற தளத்திற்குச் சென்று,  விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மாத்திரம் நாளை (14) சனிக்கிழமை ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலக கிளைகளை முற்பகல் 08.30 மணி முதல் பிற்பகல் 12.30  வரை திறந்து வைக்கவும் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின், அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினால் சான்றளிக்கப்பட்ட, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!