பொழுதுபோக்கு

உயிருள்ளவரை உஷா முதல் காதலர் தினம்வரை…!

உலகெங்கிலும் காதலர் தினம் நாளை (14) கொண்டாடப்படுகின்றது.

காதலர் தினத்தை இலக்கு வைத்து சில காதல் படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் சில காதல் படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன.

நடிகர் டி. ராஜேந்தர் இயக்கி நாயகனாக நடித்த “உயிருள்ளவரை உஷா” திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீரிலீஸ் ஆகியது.

1983 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு, டி. ராஜேந்தரே இசையமைத்திருந்தார்.

அதுபோல கௌதம் மேனன் இயக்கிய மாதவனின் மின்னலே, அமீர் இயக்கிய சூர்யாவின் மௌனம் பேசியதே படங்களும் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகி உள்ளன.

அத்துடன், தமிழ் சினிமாவின் கிளாசிக் காதல் படமான காதலர் தினம் படமும் நாளை ரீ ரிலீஸ் ஆகிறது.

புதிய வெளியீடாக வித் லவ் படம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. மேலும் மயிலாஞ்சி, விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் பூக்கி ஆகிய காதல் படங்களும் திரைக்கு வந்துள்ளன.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!