பலஸ்தீனியர்களின் குடியுரிமை இரத்து – இஸ்ரேலின் நடவடிக்கையால் பெரும் சர்ச்சை
இஸ்ரேலில் தாக்குதல்கள் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பாலஸ்தீனியர்களின் குடியுரிமையை இரத்து செய்யும் அரசின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவின் பேரில், அந்த இருவரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பலஸ்தீன தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது “ஆபத்தான முன்னுதாரணம்” என்றும், ஆயிரக்கணக்கான கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகளை இலக்குவைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், பலஸ்தீனியர்களை நேரடியாக நாடு கடத்த இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது




