உலகம் செய்தி

கிம் ஜாங் உன் மகள் அரசியல் வாரிசாக உருவெடுக்கிறாரா – தென் கொரிய உளவு அமைப்பின் தகவல்

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜு ஏவை தனது அரசியல் வாரிசாகத் தேர்வு செய்திருக்கலாம் என தென் கொரிய தேசிய புலனாய்வு சேவை (NIS) வியாழக்கிழமை சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளது.

கிம் ஜு ஏ குறித்து அதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும், சமீப மாதங்களில் அவர் பல உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ நிகழ்வுகளில் தந்தையுடன் இணைந்து பொது மேடைகளில் தலை காட்டி வருகிறார், செப்டம்பரில் அவர் பெய்ஜிங்கிற்கு தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த மதிப்பீட்டை மேற்கொள்ளும்போது, உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் அவரது அதிகரித்துவரும் பொதுப் பங்கேற்பு உள்ளிட்ட பல சூழ்நிலைகளை கருத்தில் கொண்டதாக தென் கொரிய தேசிய புலனாய்வு சேவை (NIS) தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள வட கொரிய தொழிலாளர் கட்சியின் மாநாட்டில் கிம் ஜு ஏ பங்கேற்பாரா என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் NIS கூறியுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாடு, நாட்டின் முக்கிய அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி