கனடாவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜில் (Tumbler Ridge) நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூடு உயர்நிலை பாடசாலையொன்றில் இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. அந்த பாடசாலையில் இருந்த 06 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றொருவர் உயிழந்ததாக சிபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது,
அதேநேரம் தாக்குதல்தாரியும் இதில் உயிரிழந்ததாகவும், 25 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் மற்றும் துப்பாக்கிச்சூடு குறித்த விரிவான விபரங்கள் வெளியாகவில்லை.





