மீதமுள்ள எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுமாறு 08 பெண்கள் கூட்டாக வலியுறுத்தல்!
சூப்பர் பவுல் எல்எக்ஸ் (Super Bowl LX) நிகழ்ச்சிக்கு முன்னதாக, அமெரிக்க நீதித்துறை மீதமுள்ள எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட வேண்டும் என பாதிக்கப்பட்ட 08 பெண்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
வேர்ல்ட் வித்தவுட் எக்ஸ்ப்ளோயிட்டேஷன் (World Without Exploitation) வெளியிட்ட விளம்பரமொன்றில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் இளம் வயது புகைப்படங்களை வழங்கியுள்ளனர்.
இருப்பினும் தடுத்து நிறுத்தப்பட்ட கோப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தலாம், குழந்தைகளின் ஆபாசப் படங்களைக் கொண்டிருக்கலாம் அல்லது நடந்துகொண்டிருக்கும் கூட்டாட்சி விசாரணைகளில் தலையிடக்கூடும் என்று நீதித்துறை கூறுகிறது.





