ஆபரேஷன் சிந்தூர்: சேதமடைந்த படைத்தளங்களை புனரமைக்கிறது பாகிஸ்தான்!
இந்தியா India முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூர் operation sindoor நடவடிக்கையின்போது சேதமடைந்த விமானப் படை தளங்களை புனரமைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் Pakistan ஈடுபட்டுள்ளது என தெரியவருகின்றது.
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு Pahalgam terrorist attack பதிலடியாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் மீது இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
இந்த இராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டிருந்தது.
மேற்படி தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள போஹ்லாரி விமானப்படை தளத்தின் விமான நிறுத்தும் இடம் கடுமையாக சேதமடைந்தது.
இந்நிலையில், அப்பகுதியை புனரமைக்கும் பணிகளில் பாகிஸ்தான் விமானப் படை ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி 28 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களின் படி, சேதமடைந் விமான நிறுத்தும் இடம் பச்சை நிறக் கூரையின் சில பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
இது அந்த இடத்தைச் சீரமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலையாகக் கருதப்படுகிறது.
இதேபோன்ற சீரமைப்புப் பணிகள் முரிட், சுக்கூர் மற்றும் நூர்கான் ஆகிய விமானப்படை தளங்களிலும் நடைபெற்று வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.





