ஐரோப்பா

ரஷ்ய ஜெனரல் மீதான கொலை முயற்சி – பின்னணியில் போலந்து?

ரஷ்யாவின் உயர்மட்ட  இராணுவ அதிகாரியான விளாடிமிர் அலெக்ஸீவ் (Vladimir Alexeyev) மீதான கொலை முயற்சி சம்பவத்திற்கும் போலந்திற்கும் தொடர்புள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவின் FSB உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஆட்சேர்ப்பு செய்வதில் போலந்து உளவுத்துறை ஈடுபட்டதாக எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்காமல் குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன் இந்த கொலை முயற்சியை உக்ரைன் மறுத்துள்ள அதேநேரம் இது தொடர்பில் போலந்து எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

இதேவேளை இந்த கொலை முயற்சி தொடர்பில், உக்ரைனில்  பிறந்த ரஷ்ய குடிமகன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி மீதான கொலை முயற்சி – தாக்குதல்தாரி கைது!

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!